பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை சோதனையில்- 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் .

by Editor / 09-02-2023 09:48:35pm
 பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை சோதனையில்- 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் .

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ரஹ்மத் புரோட்டா கடையில் தரமற்ற உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முயற்சி செய்தனர்.

அப்பொழுது, ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றதால், உணவுப் பொருட்கள் தேக்கி வைக்கப்படும் குடோனுக்கு சீல் வைத்தனர்.

 இந்த நிலையில், தற்போது குடோனுக்கு வைக்கப்பட்ட சீலானது அகற்றப்பட்டு பொருட்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன.

 அப்பொழுது, அந்த  குடோனில் 4 மூட்டைகள் மிளகாய் வத்தல் இருந்த நிலையில், மிளகாய் வத்தல் அனைத்தும் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்ததாக கூறி, உடனே அதனை அழிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து, புரோட்டா கடைக்கு சால்னா தயார் செய்யும் சமையல் கூடத்தில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் நேற்று தயார் செய்த மிளகாய் வத்தல் அரவை கரைசல் இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, மற்றொரு குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்தபோது, அதில் சுமார் 200 கிலோவுக்கும் மேலான கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரியவந்தது.

 அதனை தொடர்ந்து, அதனை பறிமுதல் செய்து தற்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via