கிளியாற்றில் மூழ்கி இளைஞர் பலி.

by Staff / 03-10-2023 02:45:44pm
கிளியாற்றில் மூழ்கி இளைஞர் பலி.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் 43 இவரது மகன் ஸ்ரீநாத் 20; இரண்டு நாட்களுக்கு முன் பவுஞ்சூர் அருகே பூதுார் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் சாமந்திபுரம் அருகே உள்ள கிளியாற்றில் குளிக்க சென்றுள்ளார்.நீச்சல் தெரியாததால் கிளியாற்றில் இருந்த பள்ளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via
Logo