இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவே ஆதரவு வழங்குகிறோம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

by Admin / 08-05-2026 06:40:39pm
இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவே ஆதரவு வழங்குகிறோம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

 இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்  சண்முகம்- வீரபாண்டியன் இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு, இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவே ஆதரவு வழங்குகிறோம் என்றும் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்றும் பத்தாம் தேதிக்குள் ஆட்சி அமைக்காமல் சிக்கல் ஏற்படும் என்ற நிலை உருவாகி உள்ளது நாள் தமிழக வெற்றிக்கழகத்தை அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். திமுகவுடன் உறவு தொடரும் என்றும் ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முற்படும்போது திமுகவுடன் இணைந்து போராடுவோம் என்றும் த வெ க அரசுக்கு ஆதரவு மட்டுமே அளிக்கிறோம். அதனுடன் கூட்டணி இல்லை என்றும்பாஜக கொல்லப் புற வழியாக ஆட்சி அமைப்பதற்கு முயற்சி எடுப்பதை தடுப்பதற்காகவே தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்கிறோம். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு மட்டுமே வழங்குகிறோம். ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். பெரும்பான்மை பெற்று இருக்கின்ற கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே ஆதரவு. மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக திமுகவோடு தொடர்ந்து மக்களுக்கு எதிரான பிரச்சனைகள் வரும் பொழுது போராடுவோம் என்றும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo