ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

by Staff / 17-03-2023 11:36:13am
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர் நேற்று காலை அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில், லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஏ .ஜெயந்த் ஆகியோர் அசாமின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களே ஹெலிகாப்டரை இயக்கி சென்றுள்ளனர்.காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மேற்கு பூம்டிலா மாவட்டம் மண்டாலா மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்த போது, ​​9.15 மணிக்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளது. பின்னர்தான் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், மண்டலா மலைப்பகுதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடைசியாக வந்த பகுதியில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் 5 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.அப்போது சிறிது நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரின் உடல்கள் பாதுகாப்பு படையினரால் மீட்டனர். அவர்கள் இருவரில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்பதும், மற்றொருவர் மேஜர் ஜெயந்த் என்பதும் தெரிய வந்தது. இதில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.37 வயதான லெப்டினன்ட் கர்னல் ரெட்டிக்கு, மனைவி, நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். கர்னல் ரெட்டியின் மனைவியும் ராணுவத்தில் பல் மருத்துவ அதிகாரியாக பனி புரிந்து வருகிறார். மேலும் 35 வயதான மேஜர் ஜெயந்த்தும், அஸ்ஸாமில் உள்ள மிஸ்ஸமாரியில் அவரது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via