சென்னை பத்மாவதி தாயார் கோவில் குடமுழுக்கு

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸபெருமாள் கோவில் தி.நகர வெங்கட நாராயணா சாலையில் உள்ளது.திருப்பதி செல்ல முடியாத பக்தர் இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்நிலையில்,திருப்பதியில்பத்மாவதி தாயாரை தரிசிப்பது போல் இங்கும் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்படவேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணமிருந்தனர்.இந்நிலையில் பிரபல நடிகை காஞ்சனா தனக்கு சொந்தமான ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஆறு கிரவுண்ட் நிலத்தை திருப்பதி தேவஸ் தானத்திற்கு கோவில் கட்ட இடத்தை வழங்கினார் . அதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் 2019 ஆம் ஆண்டு முதல் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டது.இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் காவல மாலை என யாகசாலைபூஜை,ஹோமங்கள் நடந்து வந்தன்.இன்று 17.3.2023 வெள்ளிக்கிழமை காலை7.30 மணியிலிரூந்து 7.44க்குள் கோவில்குடமுழுக்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. இன்று முதல் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட
உள்ளது. குட முழுக்கை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.சுமார் பத்து கோடியில்
பத்மாவதி தாயார் கோவில் திருப்பதியில் உள்ளது போன்றே கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :