டிக் டாக்கை தடை செய்த பிரிட்டன்

பிரபல குறும்பட வீடியோ செயலியான Tik Tok-க்கு இங்கிலாந்து அரசு அதிரடி தடை விதித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டில் டிக் டாக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பை பிரிட்டன் அமைச்சர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிக் டாக்கைப் பயன்படுத்துவதால் அரசுத் தகவல்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசுத் தகவல்களின் பாதுகாப்பிற்காக இந்த செயலி தடை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் டிக் டாக்கை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :