வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்களா இதோ முக்கிய அறிவிப்பு உங்களுக்கு.
வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்களா? இதோ முக்கிய அறிவிப்பு உங்களுக்கு!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதையடுத்து SBI, ICICI bank, Bank of baroda, canara bank உள்ளிட்ட பல வங்கிகள் கடந்த ஒரு மாதத்தில் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்ற மாதம், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றிற்கு வட்டி விகிதங்கள் உயர்வதோடு மாதந்தோறும் கடன்களுக்கு கட்டப்படும் EMI கள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (EBLR) யை கடந்த ஆகஸ்ட் 15, 2022 முதல் உயர்த்தியுள்ளது. இதன் வட்டி விகிதங்கள் 7.55 % + CRP + BSP லிருந்து 8.05%+ CRP+ BSP ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வங்கிகளின் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் 7.15 % + CRP லிருந்து 7.65% + CRP ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதத்தில் எம்சிஎல்ஆர் விகிதம் 7.65 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு 7.80 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்கு புதிய கட்டணங்கள் 7.95 சதவீதமாகவும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.மேலும் ரெப்போ வட்டி விகிதம் 5.40% ஆகும்.
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20 % வரை உயர்த்தியுள்ளது. ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் (BRLLR) அதிகரித்துள்ளதால் சில்லறை கடன்களுக்கு 7.95 சதவீதமாக உள்ளது.
கனரா வங்கி அதன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 7.80% லிருந்து 8.30% ஆக உயர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7, 2022க்கு பிறகு புதிய கடன் விகிதத்தை அமல்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வெளிப்புற அளவுகோல் என்பது இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 7.90 சதவீதமாக உயர்த்தியது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 8, 2022 முதல் 7.40 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Tags :