இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தலைமையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்துடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு கட்டுப்பாடு இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது .தற்போது கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை கொண்டு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உணவகங்களை நடத்த முடியும் என்று ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வணிக சிலிண்டர்களின் விலை ஏற்கனவே சுமார் 115 உயர்த்தப்பட்டுள்ளது .இதனால் உணவுகளின் விலை உயர்வு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். தடையற்ற சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags :



















