எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ ,காபி, சப்பாத்தி ,தோசை உணவுகள் தற்காலிகமாக வழங்கப்படுவது நிறுத்தம்

by Admin / 10-03-2026 10:41:29pm
எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ ,காபி, சப்பாத்தி ,தோசை உணவுகள் தற்காலிகமாக வழங்கப்படுவது நிறுத்தம்

தமிழ்நாட்டில் உள்ள ஐ,டி மற்றும் பி.ஜி விடுதிகளின் வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ ,காபி, சப்பாத்தி ,தோசை போன்ற உணவுகள் தற்காலிகமாக வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சப்பாத்தி ,குருமா, தோசை போன்ற உணவுகளுக்கு அதிக எரிவாயு தேவைப்படுவதால் அதற்கு பதிலாக குறைந்த எரிவாயு சமைக்கக்கூடிய கலவை சாதம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் -இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோக ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வணிக ரீதியான விநியோகத்தை குறைத்துள்ளது. சென்னை,  கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள விடுதிகள் மற்றும் சிறிய உணவகங்கள் இந்த தட்டுப்பாட்டை அதிகமாக எதிர்கொண்டுள்ளன. ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கங்கள் தடையற்ற எரிவாயு நிலையை உறுதி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.  எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடை நீக்கும் பொருட்டு மத்திய அரசும் மாநில அரசும் ஆலோசித்து வருகின்றன.

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ ,காபி, சப்பாத்தி ,தோசை உணவுகள் தற்காலிகமாக வழங்கப்படுவது நிறுத்தம்
 
Tags :

Share via

More stories