ஜனவரி 19 அன்று மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை

by Editor / 16-01-2025 03:02:48pm
ஜனவரி 19 அன்று மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை

பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - மதுரை இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில்  இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - மதுரை  முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06061) சென்னையில் இருந்து ஜனவரி 18 அன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06062) மதுரையில் இருந்து ஜனவரி 19 அன்று மாலை 04.00 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்படும் 8 ரயில் பெட்டிகள் அகலமான  நுழைவு வாயில்கள், வசதியான இருக்கைகள், இருக்கைகள் தவிர்த்த விசாலமான இடவசதி, கழிப்பறை வசதிகள் கொண்டவை. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.

 

Tags : ஜனவரி 19 அன்று மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை

Share via

More stories