பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.. வனத்துறை எச்சரிக்கை..

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி மலைப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானை தற்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தாளவாடி அருகே உள்ள இரிபுரம் பகுதி விவசாய தோட்டங்களில் இரும்பு கேட்டை உடைத்து கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்களை துரத்தியுள்ளது.எனவே அப்பகுதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :