நாடாளுமன்றத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி

by Staff / 07-08-2023 01:24:55pm
நாடாளுமன்றத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்.பி பதவியை மக்களவைச் செயலகம் வழங்கியுள்ளது. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி நாடாளுமன்றம் திரும்பினார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்திக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர்.

 

Tags :

Share via

More stories