பெண்களை போட்டோ எடுத்த காவலர் சஸ்பெண்ட்

by Staff / 22-10-2024 02:42:27pm
பெண்களை போட்டோ எடுத்த காவலர் சஸ்பெண்ட்

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி சாலையில் சென்ற பெண்களை காவலர் பாலமுருகன் செல்போனில் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரில் காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். போட்டோ எடுப்பதை பார்த்து கேள்வி கேட்ட மக்களை தாக்கிவிட்டு, தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo