சேப்பாக்கத்தில் கில்லியாக களத்தில் இறங்கிய உதயநிதி

by Staff / 04-12-2023 11:45:06am
சேப்பாக்கத்தில் கில்லியாக களத்தில் இறங்கிய உதயநிதி

மிக்ஜாம் புயல் எச்சரிக்கையால் சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டார். திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் - ஐஸ் ஹவுஸ் - அவ்வை சண்முகம் சாலை, பி.வி.இராமன் சாலை ஆகிய இடங்களில் மழை நீர் வடிவதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை கேட்டறிந்தார். சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தொகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories