அரக்கோணம் அருகே பனை கள் இறக்கி லிட்டர்.50 ரூ .க்கு விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் பருத்திபுத்தூர், தண்டலம், அனவர்திகான்பேட்டை, குருவராஜப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மநபர்கள் பனை, ஈச்ச மரங்களில் மண் பானைகளை கட்டி, கள் இறக்கி லிட்டர்.50 ரூ .க்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு இரகசியத்தகவல் கிடைக்க, அரக்கோணம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்தலைமையிலான காவலர்கள் நேற்று மதியம் திடீர் சோதனை நடத்தினர்.
பனை, ஈச்ச மரங்களுக்கு நடுவில் பனை ஒலையில் குடிசை அமைத்து திருட்டு மின் இணைப்பு எடுத்து மினவிளக்கு மற்றும் மின்விசிறி, கேஸ் இணைப்புடன் குடில் அமைத்து குடியிருந்து தோட்டங்களை சுற்றியுள்ள சுமார் 200 க்கு மேற்பட்ட பனை, ஈச்ச மரங்களில் மண் பானைகளை கட்டி கள் இறக்குமதி செய்து கனஜோராக விற்பனையில் ஈடுட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீஸார் திவீர சோதனை நடத்தியதில் பிளாஸ்டிக் குடம் மற்றும் கேன்களில் இருந்த சுமார் 500 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்தனர்கள்.
இதுகுறித்து அரக்கோணம் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து கள் விற்பனையில் ஈடுபட்டு தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் பனை, ஈச்ச மரங்களில் கள் இரக்க கட்டிய பானைகளை உடைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags :














.jpg)
.jpg)



