கன்னியாகுமரியில் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்-நிறைவு பெற்றதால் மக்களுக்கு அனுமதி 

by Editor / 19-03-2023 07:46:26am
கன்னியாகுமரியில் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்-நிறைவு பெற்றதால் மக்களுக்கு அனுமதி 

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா வந்த குடியரசுத்தலைவர் கேரளாவில் கொச்சியில் அமைந்துள்ள ஐஎன்எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மேலும், ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் அவர் வழங்கினார்.. இதனிடையே பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கன்னியாகுமரி வந்தார்.
அவர் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து பாதுகாப்பாக கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு ஜனாதிபதி சென்றார். கன்னியாகுமரியில் ஜனாதிபதியை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். அங்கிருந்து தனி படகு மூலம் கடலில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார். 
விவேகானந்த கேந்திர வளாகத்திற்குச் சென்ற அவர்  அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தையும் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.அங்குள்ள பாரதமாதா கோயிலிலும் வழிபாடு நடத்தினார்.. இதையடுத்து தனது பயணத்தை முடித்துக்கொண்ட  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.இதன்காரணமாக கன்னியாகுமரியில் அதிகாலைமுதலே சுற்றுலாப்பயணிகள்,பொதுமக்களுக்கு சுற்றிபார்க்க விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது.
 

கன்னியாகுமரியில் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்-நிறைவு பெற்றதால் மக்களுக்கு அனுமதி 
 

Tags : குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்

Share via