நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான உத்தரவு நவம்பர் 27ஆம் தேதி பிறப்பிக்கப்படும்.

by Admin / 21-11-2024 02:16:12pm
 நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான உத்தரவு நவம்பர் 27ஆம் தேதி பிறப்பிக்கப்படும்.

 நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த வழக்கு இன்று சென்னை குடும்ப  நல நீதிமன்றத்தில் 12 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி விவாகரத்து தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த  2004- ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜா மகனும் நடிகருமான தனுஷ்வுக்கும்  திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குஇரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் குடும்ப வாழ்வில் இருந்து பிரிய உள்ளதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான வழக்கு கொடுக்கப்பட்டது.

 

Tags :

Share via