வீட்டின் மதில் சுவர் துவாரத்தில் தலையை கொடுத்தி மாட்டிகொண்ட நாய்

by Staff / 16-10-2022 04:21:34pm
வீட்டின் மதில் சுவர் துவாரத்தில் தலையை கொடுத்தி மாட்டிகொண்ட நாய்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் லட்சுமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரதாப். இவர் வீட்டின் மதில் சுவர் துவாரத்தில் தலையை நுழைத்த நாய் சிக்கி கொண்டது. சுவரின் துவாரத்தில் வசமாக சிக்கியதால், தலையை நாயால் வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் நாய் உயிருக்கு போராடியுள்ளது. வீட்டின் உரிமையாளர் பிரதாப் இன்று காலை வெளியே வந்த போது சுவரின் துவாரத்தில் நாய் சிக்கிக் கொண்டு இருப்பதை கண்டு பதட்டமடைந்தார். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய நாயை பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo