உயிர் பயத்தில் போலீசார் ஓட்டம்

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் மூடப்பட்ட தனியார் இரும்பு ஆலை உள்ளது. இங்குள்ள இரும்புகளை திருடுவதற்காக சிலர் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த காவலாளி கொள்ளையர்களை விரட்ட முற்பட்டபோது அவர் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ராபின்சன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்தனர். அப்போது, குடிபோதையிலிருந்த ராபின்சன் பீர் பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்துவதற்காக பாய்ந்து துரத்தியதால் வேறு வழியின்றி போலீசார் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :