திருவாரூருக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் பொறுப்பேற்று முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுகு கூத்தாநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா தலைமையில் நகர செயலாளர் பக்கிரி சாமி உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை, பூ.கொத்து அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களுக்கு பயணம் செய்திருந்தார்.
Tags :