நடிகர் பொன்னம்பலத்துக்கு விஷம் கொடுத்த சகோதரர்

சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நடிகர் பொன்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது சகோதரர் தனக்கு விஷம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். “குடிப்பதால் எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்படவில்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியைச் சேர்ந்த எனது ஒன்றுவிட்ட சகோதரர் எனது மேலாளராகப் பணியாற்றி வந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனாலும், ஒரு நாள் அவர் என் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்தார், அது என் சிறுநீரகத்தை மோசமாக பாதித்தது,” என்று பொன்னம்பலம் கூறினார்.
Tags :