முன்கூட்டியே ஆண்டு தேர்வு

by Staff / 15-03-2023 03:39:06pm
முன்கூட்டியே ஆண்டு தேர்வு

தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்திய பின் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதியே தேர்வுகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories