கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - ஒரு பெண் உயிரிழப்பு.
கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா சார்ஜ் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு இந்த கட்டிடம் பயன்படுத்தாத கட்டிடம் எனக் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த விஷ்ணுவர்தன் என்பவர் தனது மனைவி பிந்து என்பவரை காணவில்லை எனவும், தனது மகள் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நிலையில், மனைவி பிந்து கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிய நிலையில் அவரை நீண்ட நேரமாக காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் யாரும் பயன்படுத்தப்படாத கட்டிடம் என்று கூறப்பட்ட அந்த இடிந்து விழுந்த கட்டிடத்தில் இடிபாடுகளை அகற்றிய போது பிந்து ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக, அவரை மீட்டு சிகிச்சைக்காக தீயணைப்புத் துறையினர் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், யாரும் பயன்படுத்தாத ஒரு கட்டிடம் என அமைச்சர் கூறிய நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கட்டிடமானது எப்படி இடிந்தது என சுகாதாரத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அந்த பெண் அங்கே எப்படி சென்றார் அந்த கட்டிடமானது பயன்பாட்டில் இருந்ததா என்பது குறித்தும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :



















