தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு சிறுவனுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பட்டு நூல் சத்திரத்தில் இயங்கிவரும் ஆர் ஆர் பிஸ்மி பிரியாணி என்ற உணவகத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட தந்தூரி சிக்கனை மதன்ராஜ் மற்றும் அவரது 11 வயது மகன் சச்சின் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் இருவருக்கும் வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :