காரைக்காலில் 80 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் பாதிப்படைந்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திருநள்ளாறு பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து காரைக்காலில் காலரா பரவல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரங்கசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, காரைக்காலில் காலரா பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்தார். பழைய குடிநீர் குழாய்கள் அனைத்தும் 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காரைக்காலில் 80 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை என்றும் ரங்க சாமி தெரிவித்தார்.
மேலும் காரைக்காலை புறக்கணிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்த ரங்கசாமி, காரைக்கால் மீது அதிக அன்பு வைத்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
Tags :