டி.கே.சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு

by Staff / 05-11-2023 03:13:51pm
டி.கே.சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு

கர்நாடகா துணை முதல்வர் கே.சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடகா துணை முதல்வர் கே.சிவகுமார் முதல்வராக விரும்பினால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மஜதவை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக உள்ளனர் என காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்த நிலையில், காங்கிரஸில் பல கோஷ்டி உள்ளதாக குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் பலர் முதல்வர் ஆசையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo