வீரமணி மீதான வழக்கு மீண்டும் தீவிரமடைந்திருப்பதற்கு காரணம் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவே
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போசோ வழக்கு தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க .ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்து கிண்டியில் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விமர்சனங்களை முன் வைத்தார். அவர் அவர் பேசும்போது மு க ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிடுவது போல இந்த விவகாரத்தை வெறும் அறிக்கை வெளியிட்டு விட்டு அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது முந்தைய திமுக ஆட்சி காலத்தில் இவ்வளவு பெரிய பாலியல் குற்றம் நடந்து அதில் எப்ஐஆா் பதிவு செய்யப்பட்ட பிறகும் உரிய விசாரணை நடத்தப்படாமல் வழக்கு மூடி மறைக்க ப்பட்டுள்ளது .இதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் எங்களுக்கு இந்த சம்பவத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்று தப்பித்துக் கொள்ள நினைப்பதை விட தனது ஆட்சி காலத்தில் அதிகாரிகள் ஏன் இந்த விவகாரத்தை முறையாக தனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்று நேர்மையாக பதில் அளிப்பதே சரியாக இருக்கும் என்றும் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறி உள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே, வழக்கமான காவல்துறை விசாரணை இதற்கு போதாது உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் சிறப்பு புலனாய்வு குழு மூலம் கால வரையறைக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தற்போது இந்த வழக்கு மீண்டும் தீவிரமடைந்திருப்பதற்கு காரணம் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவே தவிர தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசின் நடவடிக்கை அல்ல என்றும் அவர் தம் வலுவான வாதத்தை முன் வைத்தார்.
Tags :


















