இன்று பத்தாம் வகுப்பு-பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2025 26 ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டார். மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி அன்று தேர்வு நிறைவுறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 8 2026 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு முதல் முறையாக பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு பதிவியல் பாடத் தேர்வின் போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெறுகிறது.
Tags :



















