நீரிழிவு நோய்க்கு குறைந்த விலை மருந்துகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தியாகராயர் நகரில் முதல்வர் மருந்தகத்தை இன்று(பிப்.24) திறந்துவைத்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் மூலம் 1,500 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல்வர் மருந்தகங்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என்றார்.
Tags :