ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு

by Staff / 14-07-2023 03:10:56pm
ஒரே நாளில் 900 பேருக்கு டெங்கு

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பெங்களூரு நகரில் சுமார் 900 மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெங்களூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,565 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1000 பேரை சந்தேகத்தின் பேரில் டெங்கு பரிசோதனைக்கு அனுப்பியதாகவும், அதில் 900 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via

More stories

Logo