திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

by Admin / 21-03-2026 12:48:09pm
 திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சி கூடுதல் தொகுதிகள் கோரிய நிலையில் திமுக ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க முன்வந்ததால் அதிருப்தி அடைந்த கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது .வி.சி.கவி குறைந்தது பத்து தொகுதிகள் வரை  கோாி வருகிறது. இருப்பினும் திமுக எட்டு இடங்கள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது .தங்களுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கப்படுவதாக திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் . கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.கவுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சுமார் 8 முதல் 9 இடங்கள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அக்கட்சியின் எல்.கே. சுதீஷ்க்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை போட்டியிட்ட ஆறு தொகுதிகளை தக்க வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது .ஆனால், புதிய கூட்டணி கட்சிகளின் வருகையால் எண்ணிக்கையை குறைக்க தி,மு,க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .மக்கள் நீதி மையம் இரண்டுக்கும் மேற்பட்டதொகுதிகளை பெறுவது குறித்தும் தங்களுடைய சின்னமான டார்ச் லைட் சின்னத்தில்போட்டியிடுவது குறித்தும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

திமுக இத்தேர்தலில் இருநூறு தொகுதிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்து களம் ஆடி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் வாக்கு வங்கி மற்றும் வெற்றி வாய்ப்பை புள்ளி விவரங்களுடன் ஆய்வு செய்து இடங்களை தி.மு.க ஒதுக்கி வருகிறது. இதனாலேயே முக்கிய கூட்டணி கட்சி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதுவரை தொகுதி  இறுதி செய்த கட்சிகள் காங்கிரஸ்- 28 ,இந்திய கம்யூனிஸ்ட்- 5 மதிமுக- 4,கொ.ம. தே.க -2,0, ஐ யூ எம் எல் -2, ம.ம. க-2,

 

Tags :

Share via

More stories