பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் – மம்தா ஆவேசம்

by Admin / 29-07-2021 02:26:33pm
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் – மம்தா ஆவேசம்

 

 

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றியணைய வேண்டியது அவசியம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
ஐந்துநாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பல்வேறு விவாகரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சோனியா உடனான சந்திப்பில் நடப்பு அரசியல் குறித்து விவாதித்ததாகவும். கொரோனா சூழல், பெகாஸஸ் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவம் தெரிவித்தார்.
 
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய மம்தா, பலம் பொருந்திய பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் அழைப்பு  விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி இல்லத்துக்கு சென்ற அவர், அங்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை  நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

 

Tags :

Share via