சீன வெளியுறவு அமைச்சருடன் தாலிபான்கள் குழு சந்திப்பு

by Admin / 29-07-2021 02:25:43pm
சீன வெளியுறவு அமைச்சருடன் தாலிபான்கள் குழு சந்திப்பு

 



சீனாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் மண்ணை கூட யாரையும் பயன்படுத்த விட மாட்டோன் என தாலிபான்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வெளியேறிவருவதை அடுத்து அங்கு தாலிபான்களின்  பலம் கூடி வருகிறது. இந்த நிலையில் தாலிபான்களின் 9 பிரதிநிதிகள் கொண்ட குழு 2 நாள் பயணமாக சீனாவின் தியான்ஜினில் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை தாலிபான்களின் குழு சந்தித்து பேசியுள்ளது. அப்போது அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து விவாதித்ததாக தாலிபான்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 
இதனிடையே,ஆப்கானிஸ்தானில் அமைதியான நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு செயல்பாட்டில் தாலிபான் முக்கிய பங்கு வகிப்பர் என சீன அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வரும் இந்த வேளையில் தாலிபான்களின் சீனா பயணம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

Tags :

Share via