மக்களவைத் தேர்தல் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வாக்காளர்கள்..

by Editor / 18-04-2024 11:49:31pm
மக்களவைத் தேர்தல்  சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வாக்காளர்கள்..

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வாக்கு செலுத்த சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முக்கியுமாக சென்னையிலிருந்து பேருந்து மூலமும் ரயில் மூலமும் அதிகம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் ரயில் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் இடம்பிடிக்க முண்டியடித்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதேபோன்று அரசு பேருந்துக்களிலும் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags : சொந்தஊர்களுக்கு படையெடுக்கும் வாக்காளர்கள்..

Share via

More stories

Logo