வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்வதில் சிரமம்
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்வதில் சிரமம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொண்டு சென்றனர்.வாக்கு பெட்டிகளை கொண்டு சென்ற வாகனங்களுக்கு சிறப்பு பூஜை
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நாளை வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் இருந்து வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் கயத்தார் பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றால் கயத்தார் சாலைப்புதூர் டோல்கேட்டினை தண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.எனவே வாக்கு பெட்டி மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி கட்டணம் கொடுத்தால் தான் கொண்டு சொல்வோம் என்று கூறி பொருட்களை ஏற்ற மறுத்தனர் . இதனால் வாக்கு சாவடி மையங்களுக்கு பொருள்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது..கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இதை போன்று வாக்குச் சாவடி மையங்களுக்கு பொருள்களை கொண்டு சென்ற போது தங்களிடம் சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள் வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுங்கச்சாவடி கட்டணத்தை தானே தருவதாக தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் பொருட்களை வாகனத்தில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி பட்டியல் ஏற்றப்பட்ட வாகனங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தி தேங்காய் உடைத்து வாகனங்கள் ஏற்றி சென்றனர்.
Tags :