காலை உணவு திட்டம் மன நிறைவை தருகிறது- முதல்வர் ஸ்டாலின்.
சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் பள்ளியில், காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் இன்று (ஆக.26) பேசிய முதல்வர் ஸ்டாலின், “இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வர மாட்டார்கள், தெம்பாக வகுப்பறைக்குள் செல்வார்கள். மாணவர்களின் பசியை போக்க தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் மன நிறைவை தருகிறது. இந்த திட்டத்தை நேரடியாக கண்காணித்து வருகிறேன். காலை உணவு திட்டம் தமிழ் சமுதாயத்துக்கான முதலீடு” என்றார்.
காலை உணவுத்திட்டம் வயிற்றுப்பசியை போக்குவது மட்டுமல்லாது மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் திட்டம் ஆகும். காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சியில் இன்று (ஆகஸ்ட் 26) பேசிய துணை முதல்வர், "திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். தாய்மை உணர்வுடன் செயல்படும் சகோதரிகளுக்கு நன்றி" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.விழாவில், உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் உணவு அருந்தினார்பஞ்சாப் முதலமைச்சர்பகவான்மான்ட்,துணைமுதல்வருதயநிதிஸ்டாலினாகியோா்கலந்துகொண்டனா்.
Tags : காலை உணவு திட்டம் மன நிறைவை தருகிறது- முதல்வர் ஸ்டாலின்.



















