சென்னையில் விநாயகர் சதுர்த்தி1,500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு.

by Staff / 26-08-2025 09:59:51am
சென்னையில் விநாயகர் சதுர்த்தி1,500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு.

இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.27) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை சார்பில் அணிவகுப்புக்களும் நடைபெற்றுவருகின்றன.

 

Tags : சென்னையில் விநாயகர் சதுர்த்தி1,500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு.

Share via