காசாவில் பத்திரிக்கையாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைச்சகம் தகவல்.
இஸ்ரேல் தொடர்ந்து காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் மருத்துவமனை மீது இரட்டை தாக்குதலை நடத்தியதில் சர்வதேச ஊடகத்தில் பணி புரியும் பத்திரிக்கையாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.. இத் தாக்குதலில் உதவ வந்தவர்கள் மீதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..
பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு துயரமான விபத்து என்று அழைத்ததோடு ராணுவ அதிகாரிகள் இது குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.. காசாவில் போர் தொடங்க 2023 இல் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.. பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் போர் நடக்கும் காசா பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
Tags :



















