பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தற்போது முழு நாடும் கணேஷோத்சவத்தின் உற்சாகத்தில் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். கணபதி பாப்பாவின் ஆசியுடன், குஜராத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கமாக இன்று திகழ்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

Tags :