திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

by Staff / 05-08-2023 01:08:00pm
திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆந்திர மாநில நீர் மேலாண்மை திட்டத்தை மேற்பார்வையிட சென்ற அவரை ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மறித்ததால் அங்கு வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை, கல்வீச்சு சம்பவங்களால் பலர் காயமடைந்தனர். காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வேலூர், திருப்பத்தூரில் இருந்து திருப்பதி, சித்தூர் பகுதிக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் இன்று செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via