அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உரை

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை-
-முதல்வர் காலை உணவு திட்டம் ,நான்முதல்வன்திட்டம், புதுமைப் பெண் கலைஞர் உரிமை திட்டம் என தமிழ்நாட்டில இருக்க பெண்கள் குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் உங்களுடன் முன்னேற்றத்திற்கு எதிர்காலத்திற்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு- பாடுபடக்கூடிய தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு முதல்ல என்னுடைய நன்றி. பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளோட பசியை போக்கணும்னு முடிவு பண்ணி உருவாக்கின திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.
சென்னையில், ஒரு பள்ளி விழாவுக்கு போன போது ஒரு குழந்தை இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை என்று சொன்னதைக் கேட்ட உடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் உருவாக்கின திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.
அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தை கூட பசியோட வந்து தவிர்க்கக்கூடாது .இந்த திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி பேரறிஞர் அண்ணா உடைய பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். அரசு உதவி பெறக்கூடிய பள்ளி மாணவ மாணவியர்கள் கேட்டாங்க .அதனாலதான் இந்த கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவ மாணவியர் சாப்பிட காரணமானதிட்ட த்தை இன்றைக்கு விரிவுபடுத்தியிருக்கேன். இனிமே அரசு உதவி வழங்கக்கூடிய பள்ளிகளை சேர்ந்த ரெண்டு லட்சத்து 23 ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டஇருக்காங்க. மொத்தமாக சொல்லனும்னா, நாள் தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கு அதிகமான குழந்தைகள் சத்தான சுவையான காலை உணவு சாப்பிடுவாங்க. புறநானூறு ,திருக்குறள், மணிமேகலை நம்ம இலக்கியங்கள் மட்டுமல்ல. அவ்வையார், வள்ளலார் போன்ற சான்றோர்களும் பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க .சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னர் ஏழை எளியவருடைய பசியை போக்கறதுனால பசிப்பிணி மருத்துவர் என்று போற்றப்படுகிறார். பசிப்பிணி போக்கும் பணியை அரசுக்கும் பொருந்தும். ஏழை எளிய மாணவர்களுக்கு உணவு அளிக்கிறது மூலமா குழந்தைகளை நலமான வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்திருக்கிறோம். குழந்தைகள் தான் தமிழ்நாட்டோட எதிர்காலசொத்து. அதனாலதான், காலை உணவு திட்டத்தை ஒதுக்கீடு பற்றி அதிகாரிகள் வருங்கால தலைமுறைய உருவாக்கின முதலீடு சொல்லுங்கன்னு ஆணித்தரமா சொன்னேன் .ஆனா, இந்த திட்டம் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறேன் பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.. இப்படி ஏராளமான நன்மைகள் காலை இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பெண் அளித்திருந்த பேட்டியை பார்த்தேன். டிவில பார்த்தேன். அதுல காலை உணவு திட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு மட்டுமில்ல.
ஒவ்வொரு திட்டத்தையும் பத்திரிகைகள் பாராட்டுவதோ இல்லையா பயன்படுத்திய மக்கள் பாராட்டி தான் இருக்காங்க..இல்லாத கற்பனையாக கதைகளுக்குவடிவம் கொடுப்பதையும் ஈரை பேணாக்க வேலையை செய்பவர்களுக்கு நன்மை நம்மை பாராட்டுவதற்கு மனம் இல்லை. எந்த ஒரு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் நம் அரசு உடனடியாக கவனத்தில் இருந்து தீர்த்து வைக்கிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறோம்..பொய் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துகள் உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு சோ்த்திட முடியாது..எந்த காலத்திலும் நடக்காது. ஒவ்வொரு குடும்பமும் பயன்படக்கூடிய வகையில மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். .இந்த காலை உணவு திட்டம் திராவிடமாடல் அரசுக்கு நீடித்த புகழ தேடித் தந்திருக்கு. நாம தொடங்கின பின்பு தான் இந்தியாவுடைய பல்வேறு மாநிலங்களில் ,ஏன் கன்னடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டிருக்கு.. இந்த நேரத்துல அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்க விரும்புவது எந்த ஊர்லையும் எந்த ஸ்கூல்லையும் உணவு கூட தர ஒரு துளி கூட குறைய கூடாது அந்த மாதிரி அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளி மாணவரை சாப்பாட்டையும் கவனமா ஸ்பெஷல் கேரக்டர் எடுத்து பாருங்க நான் ஆய்வுக்கு வெளியூர் போகும் போதெல்லாம் ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு திடீர்னு போறேன் .அங்க இருக்கக்கூடிய பிள்ளைகளுடன் பேச காலை உணவு எப்படி இருக்குன்னு பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டு பார்க்கிறேன். மாண்புமிகு அமைச்சர் தம்பி உதயநிதி கூட சுற்றுப்பயணம்செல்லும் பொழுது பாா்க்கிறாா் எனவே மற்ற அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரிகளும் பாா்க்கிறாா்கள்..என்னையும் பொருத்தவரைக்கும் நம்ம தமிழ்நாட்டு பசங்க படிக்கிறதுக்கு எதுவும் தடையா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அது நீட் தேர்வுனாலும் சரி அதை.உடைப்பது தான் எங்களுடைய முதல் படி நீட் தேர்வு எதிர் கேள்வி கேட்டாங்க. ஆனா, இன்னைக்கு நீட் தேர்வு நடக்கிற முறைகளை பார்த்து உச்ச நீதிமன்றம் பல கேள்விகேட் டிருக்கு.
ஆனா நாம அவங்க கிட்ட கேட்கிற கேள்வி நெருக்க டி செவப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்விய உடனடியாக மாநில பட்டியிருக்கு மாத்த ஒன்றிய அரச தயார் இருக்கா? இந்த ஆக்கபூர்வமான செயல அவங்க செய்வாங்களா. நம்மள பொறுத்த வரைக்கும் நீட் தேர்வு தேவையற்றது .அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்துறோம். .இன்னொரு பக்கம் மாணவருடைய நலனுக்காக பள்ளிக்கல்விக்கும் கல்லூரிகளுக்கும் உயர ....கல்வியில் ஏராளமான திட்டங்கள் தீட்டுகிறோம். எனவே ,தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என நான் திரும்பவும் சொல்றேன் .கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து .அந்த சொத்து தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றார்கள். மாணவர் செல்வங்களே... படிங்க.. படிங்க... படிங்க நீங்க உயரப் படிங்க ....நீங்கள் உயர ...உங்கள் வீடு உயரும்... இந்த நாடும் உயரும்... என்று உங்களையெல்லாம் மனதார வாழ்த்து விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
Tags :