இறால் பண்ணையில் 110 கோடிரூபாய் போதைப்பொருளை பதுக்கிய முகம்மது சுல்தான் கைது. 

by Editor / 25-04-2024 09:41:37pm
இறால் பண்ணையில் 110 கோடிரூபாய் போதைப்பொருளை பதுக்கிய முகம்மது சுல்தான் கைது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மீமிசல் அருகே, அரசங்கரை கடற்கரைப் பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருபவர் முகமது சுல்தான். இவரது பண்ணையில் கடந்த மார்ச் 10ம் தேதி ரூ.110 கோடி மதிப்பிலான ஹசீஸ் போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், தலைமறைவாக இருந்த பண்ணையின் உரிமையாளர் முகமது சுல்தான் இன்று(ஏப்.25) கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மே.9ம் தேதி வரை காவலில் வைக்க புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags : இறால் பண்ணையில் 110 கோடிரூபாய் போதைப்பொருளை பதுக்கிய முகம்மது சுல்தான் கைது. 

Share via

More stories