பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் புகழ் பெற்ற சோமநாத் கோவிலில் வழிபாடு

by Admin / 11-01-2026 12:24:36am
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் புகழ் பெற்ற சோமநாத் கோவிலில் வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் புகழ் பெற்ற சோமநாத் கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்றார்.  கஜினி முகமது சோமநாத் கோயிலின் மீது படையெடுத்து 1000 -மாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடத்தப்படும் நான்கு நாள் சுவா பிமான் பர்வ் கொண்டாட்டத்திலும் பிரதமர் பங்கெடுத்தார். இக்கோயிலின் அறக்கட்டளையிலும் பிரதமர் தலைவராக இருப்பதால் அங்கு நடந்த கூட்டத்திற்கும் அவர் தலைமை வகித்தார். இரவு 8 மணி அளவில் கோவிலில் நடைபெற்ற ஓம்கார மந்திர உச்சரிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட ட்ரோன் காட்சியையும் அவர் பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை  அவர் சோம்நாத் கோவிலை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் சௌந்தர்ய யாத்திரை எனும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்குகிறார். ஊர்வலத்தில் 108 குதிரைகள் அணிவகுத்து வர உள்ளன. யாத்திரையை தொடர்ந்து கோவிலில் தரிசனம் மற்றும் பூஜைகளை முடித்துவிட்டு அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் உரையில் இந்தியாவின் நாகரீக தைரியத்தின் அடையாளமாக சோம்நாத் கோயில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் புகழ் பெற்ற சோமநாத் கோவிலில் வழிபாடு
 

Tags :

Share via

More stories

Logo