ரகளையில் ஈடுபடும் திமுக., நிர்வாகிசெல்போன்களை தட்டிப்பறித்து தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின். இவர் திமுக தோவாளை ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் மீது அடிதடி கட்டப்பஞ்சாயத்து போன்ற பல குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் இருந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வீடு ஒன்றை தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியுள்ளதாகவும், அந்த வீட்டில் குடியிருக்கும் நபரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற பல முயற்சிகள் மேற்கொண்டு இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் அடியாட்களுடன் நுழைந்து தகராறில் ஈடுபடுவதும், அதற்கு ஆதாரமாக அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் வயர்களையும் எடுத்து சென்றுள்ளதாகவும் நேற்று முன் தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டதாக்க கூறப்படுகிறது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது ஞாலம் பகுதியில் சுடுகாடு சம்பந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களுடன் கைகலப்பில் ஈடுபடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஞாலம் ஊராட்சி தலைவரும், திமுக தோவாளை ஒன்றிய செயலாளராகவும் இருக்கும் பிராங்கிளின் இது போன்று பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags : ரகளையில் ஈடுபடும் திமுக., நிர்வாகிசெல்போன்களை தட்டிப்பறித்து தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.