3 மாதத்தில் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆளுநர்

by Editor / 27-06-2025 02:42:05pm
3 மாதத்தில் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆளுநர்

மகளிர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஆட்டோ வேண்டுமென கோரிக்கை வைத்திருந்த பெண்ணின் கனவு 3 மாதங்களில் நிறைவேறியது. ஆளுநரின் தனிப்பட்ட உதவியால் அந்த பெண்ணிற்கு புதிய ஆட்டோ வாங்கி கொடுக்கப்பட்டது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய அந்த பெண் “கடவுள் யாரையாவது அனுப்புவாங்கனு நினைச்சேன். அதுதான் ஆளுநரையே அனுப்பியிருக்காங்க” என கூறியுள்ளார். மேலும், தன் வாழ்வில் புதிய தொடக்கமாக இதை நினைப்பதாக அந்த பெண் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via