நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் மரணம்!
நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
70களில் சினிமாவில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. 1976ல் 'உங்களில் ஒருத்தன்' படத்தின் திரையுலகில் அறிமுகமான ஜோக்கர் துளசி, உடன்பிறப்பு, தமிழச்சி, அவதார புருஷன், இளைஞரணி, சாமுண்டி, திருமதி பழனிச்சாமி, மறவன், நம்ம ஊரு பூவாத்தா, சின்னமணி, புதுமைப்பித்தன், புருஷன் பொண்டாட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சிகளிலும் இவர் வாணி ராணி, கோலங்கள், கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இயக்குர்கள் தாமிரா, கேவி.ஆனந்த், நடிகர் பாண்டு, தயாரிப்பாளர் பாபுராஜா ஆகியோர் கொரோவால் மரணம் அடைந்திருக்கும் நிலையில் ஜோக்கர் துளசியின் மரணம் திரையுலகினரின் துக்கத்தையும் கவலையையும் அதிகரிக்க செய்திருக்கிறது.
ஜோக்கரின் மறைவுக்கு, ''அற்புதமான மனிதர் ஜோக்கர் துளசி. அவர் காலமானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்தது வருத்தமாக இருக்கிறது. நாடகத்திலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த நல்ல மனிதர். பாசிட்டிவான எண்ணங்களுடன் தினமும் எனக்கு மெசேஜ் அனுப்புவார். அவரைப் பற்றிய பணி நினைவுகளை வாணிராணியில் நடித்தபோது பகிர்ந்து கொண்டார். அவரது குழந்தை போன்ற உற்சாகத்தை இழக்க வேண்டியதாகிவிட்டதே''என்று நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags :



















