ஓசியில் சில்லி சிக்கன் தர மறுத்தவர் வீட்டில் குண்டு வீச்சு

சேலம் மாவட்டத்தில் ஓசியில் சில்லி சிக்கன் தராதவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அழகாபுரத்தைச் சேர்ந்த கலைமணி என்பவர் தனது வீட்டின் முன்பாக கோழிக்கறி விற்பனை செய்துவருகிறார். இரவில் சில்லி சிக்கனும் விற்பனை செய்கிறார். இந்நிலையில், கடைக்கு போதையில் வந்த சந்தோஷ் என்பவர், ஓசியில் சில்லி சிக்கன் கேட்ட நிலையில், கலைமணி தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவரது வீட்டில், சந்தோஷ் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
Tags :