ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். சகோதரர்களான பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி ஆகியோர் சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். ஹட்டி சமூகத்தினரிடையே இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பாரம்பரியத்தின்படி, சகோதரர்கள் ஒரே மனைவியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
Tags :