நடிகை மீனா உருக்கம் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்

by Editor / 14-08-2022 04:15:45pm
நடிகை மீனா உருக்கம் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்னையால் உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது நடிகை மீனா தான் உடல் உறுப்பு தானம் செய்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். "ஒரு உயிரை காப்பற்றுவதை விட வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது. அதிலும் உடல் உறுப்பு தானம் என்பது ஒரு உன்னதமான ஒன்று. ஒரு வேளை, எனது கணவருக்கும் யாராவது உறுப்பு தானம் செய்திருந்தால், எனது வாழ்க்கை தற்போது மாறியிருக்கும். ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம், 8 பேர் உயிரை காப்பாற்றும். அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
நடிகை மீனா உருக்கம் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்
 
Tags :

Share via