சேலத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

by Staff / 17-04-2023 01:58:49pm
சேலத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

சேலம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஆர்எஸ்எஸ் கொடியை ஏற்றி பேண்ட் வாத்தியங்கள் முழங்க பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து ராணிப்பேட்டை, கடைவீதி, தாயுமானவர் தெரு, ராமலிங்க வள்ளலார் தெரு, காமராஜனார் சாலை, சாரதா ரவுண்டானா பகுதியை வந்தடைந்தது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையில் அணிவகுத்து சென்ற ஊர்வலத்தில் இருபுறமும் போலீசார் வழி நெடுங்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo